வானம் இரவுக்குப் பாலமிடும்..,

பாடல்:
இது ஒரு பொன்மாலைப் பொழுது!

படம்:
நிழல்கள்

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வைரமுத்து (முதல் பாடல்!)

முழுவரிகள்:
ஹே ஹோ ஹ்ம்.. லல லா..

பொன்மாலைப் பொழுது,

இது ஒரு பொன்மாலைப் பொழுது!
வானமகள், நாணுகிறாள்;
வேறு உடை, பூணுகிறாள்;
இது ஒரு பொன்மாலைப் பொழுது!

ஹ்ம்ம்ம் ஹே ஹான் ஹோ.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்! (ஆயிரம்..)
வானம் இரவுக்குப் பாலமிடும்..,
பாடும் பறவைகள் தாளமிடும்..
பூமரங்கள், சாமரங்கள், வீசாதோ!! (இது ஒரு..)

வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்! (வானம்..)
ஒரு நாள் உலகம் நீதிப் பெறும்,,
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால், வேள்விகளை, நான் செய்வேன்... (இது ஒரு..)

அஅஆ... ஹே ஹோ ஹான்.. லல லா..
ஹ்ம்ம்ம் ஹே ஹோ ஹான்.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..

என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..

பாடல்:
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

படம்:
குமார ராஜா

இசை:
டி ஆர் பாப்பா

பாடியவர்:
சந்திரபாபு ஜே பி

எழுதியவர்:
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

முழுவரிகள்:
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..

என்னான்னு தெரியலே, சொன்னாலும் விளங்கலே,
என்னான்னு தெரியலே, சொன்னாலும் விளங்கலே,
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..

ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

கண்ணான தந்தையை, கண்ணீரில் தள்ளினேன்..
கண்ணான தந்தையை, கண்ணீரில் தள்ளினேன்..
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்..

பெண்ணாசை வெறியிலே, தன்மானம் தெரியலே,
பெண்ணாசை வெறியிலே, தன்மானம் தெரியலே,
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..

ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!