வானம் இரவுக்குப் பாலமிடும்..,

பாடல்:
இது ஒரு பொன்மாலைப் பொழுது!

படம்:
நிழல்கள்

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வைரமுத்து (முதல் பாடல்!)

முழுவரிகள்:
ஹே ஹோ ஹ்ம்.. லல லா..

பொன்மாலைப் பொழுது,

இது ஒரு பொன்மாலைப் பொழுது!
வானமகள், நாணுகிறாள்;
வேறு உடை, பூணுகிறாள்;
இது ஒரு பொன்மாலைப் பொழுது!

ஹ்ம்ம்ம் ஹே ஹான் ஹோ.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்! (ஆயிரம்..)
வானம் இரவுக்குப் பாலமிடும்..,
பாடும் பறவைகள் தாளமிடும்..
பூமரங்கள், சாமரங்கள், வீசாதோ!! (இது ஒரு..)

வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்! (வானம்..)
ஒரு நாள் உலகம் நீதிப் பெறும்,,
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால், வேள்விகளை, நான் செய்வேன்... (இது ஒரு..)

அஅஆ... ஹே ஹோ ஹான்.. லல லா..
ஹ்ம்ம்ம் ஹே ஹோ ஹான்.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..

என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..

பாடல்:
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

படம்:
குமார ராஜா

இசை:
டி ஆர் பாப்பா

பாடியவர்:
சந்திரபாபு ஜே பி

எழுதியவர்:
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

முழுவரிகள்:
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..

என்னான்னு தெரியலே, சொன்னாலும் விளங்கலே,
என்னான்னு தெரியலே, சொன்னாலும் விளங்கலே,
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..

ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

கண்ணான தந்தையை, கண்ணீரில் தள்ளினேன்..
கண்ணான தந்தையை, கண்ணீரில் தள்ளினேன்..
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்..

பெண்ணாசை வெறியிலே, தன்மானம் தெரியலே,
பெண்ணாசை வெறியிலே, தன்மானம் தெரியலே,
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..

ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?

பாடல்:
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!

படம்:
டிஷ்யூம்

இசை:
விஜய் ஆண்டனி

பாடியவர்:
ஜெயதேவ், ராஜலக்ஷ்மி

எழுதியவர்:
தெ. தெ, தெ! (தெரியவில்லை. தெரிந்தவர், தெரிவிக்கவும்!)
[நா முத்துக்குமாரா இருக்கலாம்..]

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

ஹேய்...
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்! - பெண்ணே,
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்!

கட்டிப்போட்டுக் காதல் செய்கிறாய்! - முதுகில்,
கட்டெறும்புப் போலே ஊர்கிறாய்!

காதல் தானே! இது காதல் தானே!

உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை?
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்!
இன்னும் பூமுகம் மறக்கவில்லை.. (நெஞ்சாங்கூட்டில்..)

ஹேய்...
விண்ணைத் துடைக்கின்ற முகிலை,
வெள்ளி நிலவை, மஞ்சள் நட்சத்திரத்தை,
என்னைத் தேடி மண்ணில் வரவழைத்து,
உன்னைக் காதலிப்பதை உரைத்தேன்!

இன்று பிறக்கின்ற பூவுக்கும், சிறு புல்லுக்கும்,
காதல் உரைத்து முடித்தேன்;
உள்ளம் காதலிக்கும் உனக்குமட்டும், இன்னும்
சொல்லவில்லையே, இல்லையே!

லட்சம் பல லட்சம் என்று, தாய் மொழியில் சொல்லிருக்க,
ஒத்தைச் சொல்லு சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி, பாத்திரத்தைக் கழுவிட்டு
பட்டினியால் களைப்பாளே அதுபோலே...

நெஞ்சாங்கூட்டில்.. நெஞ்சாங்கூட்டில்.. (நெஞ்சாங்கூட்டில்..)

ஹேய்,
சாய் சாய் பாய் பாய், சிப்பிலிப்பு சாய் பாய்..
காய் வாய் பாய் சாய், லுப்பாய் சாய் பே க்கு..
துப்பு சுப்பாய், துப்பலாய், சி ல பாய் துலுப்பு,
சக்குத் தக்காய், சலோ, வெக்கேன்டா..

சின்னச் சின்னச் செல்லக் குறும்பும்,
சீனிச் சிரிப்பும், என்னைச் சீரழிக்குதே;
விறுவிறுவென வளரும் பழம்,
எந்தன் விரதங்களை வெல்லுதே!

உன்னைக் கரம்பற்றி இழுத்து, வளை உடைத்து,
காதல் சொல்லிட சொல்லுதே;
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து,
என்னைக் குத்திக் குத்தியே கொல்லுதே!

காதலெந்தன் வீதி வழி, கையை வீசி வந்த பின்னும்,
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?
ஃபெப்ரவரி மாதத்துக்கு, நாளு ஒண்ணுக் கூடி வர,
ஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோல...

நெஞ்சாங்கூட்டில்.. நெஞ்சாங்கூட்டில்.. (நெஞ்சாங்கூட்டில்..)

(காதல் தானே!..) (நெஞ்சாங்கூட்டில்..) (நெஞ்சாங்கூட்டில்..)

நிலா தமிழறிந்தால்,

பாடல்:
மலர்களே, மலர்களே, இது என்ன கனவா?

படம்:
லவ் பேர்ட்ஸ்

இசை:
ஏ ஆர் ரஹ்மான்

பாடியவர்:
ஹரிஹரன், சித்ரா

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

மலர்களே, மலர்களே, இது என்ன கனவா?
மலைகளே, மலைகளே, இது என்ன நினைவா?
உருகியதே.. எனதுள்ளம்..
பெருகியதே.. விழிவெள்ளம்..

விண்ணோடும் நீதான்..
மண்ணோடும் நீதான்..
கண்ணோடும் நீதான்.. வா..ஆ.அஅஅ..
(மலர்களே,..)(விண்ணோடும்..)


மேகம் திறந்துகொண்டு,
மண்ணில் இறங்கி வந்து,
மார்பில் ஒளிந்துக் கொள்ள, வா.. வா..


மார்பில் ஒளிந்துக் கொண்டால்,
மாறன் அம்பு வரும்,
கூந்தலில் ஒளிந்துக் கொள்ள வரவா..

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா, அறையா!
மலர் சூடும் வயதில் என்னை, மறந்து போவது தான் முறையா?


நினைக்காத நேரமில்லை; காதல் ரதியே, ரதியே..
உன் பேரைச் சொன்னால் போதும், நின்று வழிவிடும் காதல் நதியே..

என் ஸ்வாசம் உன் மூச்சில்..
உன் வார்த்தை என் பேச்சில்..

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம், என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

பூவில் நாவிருந்தால்,
காற்று வாய்திறந்தால்,
காதல், காதல் என்று பேசும்..

நிலா தமிழறிந்தால்,
அலை மொழி அறிந்தால்,
நம் மேல் கவி எழுதி வீசும்..

வாழ்வோடு வளர்பிறை தானே, வண்ண நிலவே, நிலவே..
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே, கனவே..
ஊனோடு உயிரைப் போலே உறைந்து போனது தான் உறவே..


மறக்காது உன் ராகம்,
மரிக்காது என் தேகம்,

உனக்காக உயிர் வாழ்வேன், வா என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

பரோட்டாக்கு, பாதிச் சொத்தை நாம அழிச்சோம்!

பாடல்:
வெயிலோடு விளையாடி

படம்:
வெயில்

இசை:
ஜீ வீ பிரகாஷ் குமார்

பாடியவர்:
திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்

எழுதியவர்:
நா முத்துக்குமார்

முழுவரிகள்:
இய்யாஹி யாஹி யாஹி யாஹி,
யதாஹி யாஹி யாஹி யாஹி
யதாஹி யதாஹி யாஹி, ஹே..

தையாரி.. தையாரி.. ஹே..
யாஹி யாஹி யாஹி யாரோ,
தாராரோ.. ஹே, தாரா ரா ரா ரோ..

வெயிலோடு விளையாடி,
வெயிலோடு உறவாடி,
வெயிலோடு மல்லுக்கட்டி,
ஆட்டம் போட்டோமே!

நண்டூரு நரி ஊரு,
கருவேலங் காட்டோரம்,
தட்டானைச் சுத்திச் சுத்தி,
வட்டம் போட்டோமே!

பசி வந்தா குருவி முட்டை;
தண்ணிக்கு தேவன் குட்டை;
பறிப்போமே சோளத்தட்டை;
புழுதி தான் நம்மச் சட்டை!
(புழுதி தான்..)அஆ... (வெயிலோடு..)

ஏ... ஓ...
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்..
வத்திக்குச்சி அடுக்கிக் கணக்குப் பாடம் படிச்சோம்!
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்..
தண்டவாளம் மேல காசை வச்சுத் தொலச்சோம்!

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி, அப்பாவோட வேட்டியிலே,
கண்ணாடி லென்சை வச்சு, சினிமா காமிச்சோம்!
அண்ணாச்சிக் கடையில தான், எண்ணெயில தீக்குளிச்ச,
பரோட்டாக்கு, பாதிச் சொத்தை நாம அழிச்சோம்!

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்,
ஓட்டம் போட்டுத் திரிஞ்சோம்!
வெயிலத் தவிர வாழ்க்கையில,
வேற என்ன அறிஞ்சோம்?? (வெயிலோடு..)

ஹேஹே ஹேஹே ஹெஹஹெ ஹேஹே,
ஹேஹே! ஹேஹே!
ஹேஹே ஹேஹே ஹெஹஹெ ஹேஹே,
ஹேஹே ஹேஹே ஹேஹேஹே.. (2 முறை)

ஏலேலேலே லேலேலே.. (3 முறை)

வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்..
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்!
காந்தத்தை மண்ணுல தேய்ச்சுப் பேயை ஆட்டுனோம்..
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டுனோம்!

ஊமத்தம்பூவை மாத்தி கல்யாணம்தான் கட்டிக்குவோம்;
கழுதைமேல ஊர்வலமா ஊரைச் சுத்துனோம்!
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழைப் பெய்யும்;
அப்ப நாங்க மின்னலுல போட்டோப் புடிச்சோம்!

தொப்புள்கொடியைப் போலத்தான்,
இந்த ஊரை உணர்ந்தோம்..
வெயிலைத் தவிர வாழ்க்கையில,
வேற என்ன அறிஞ்சோம்!! (வெயிலோடு..)
(நண்டூரு..) (பசி வந்தா..)
(வெயிலோடு..) (வெயிலோடு..)

உறவோடு சிலகாலம், பிரிவோடு சிலகாலம்,

பாடல்:
நான் ஒரு முட்டாளுங்க..

படம்:
அலைபாயுதே

இசை:
ஏ ஆர் ரஹ்மான்

பாடியவர்:
ஆஷா போஸ்லே, ஷங்கர் மகாதேவன்

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பிலும் குழு வரிகள் சாய்விலும்)

துன்பம் தொலைந்தது; இன்பம் தொலைந்ததையோ..! (துன்பம்..)

செப்டம்பர் மாதம் - செப்டம்பர் மாதம் -
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்! (செப்டம்பர்..)
அக்டோபர் மாதம் - அக்டோபர் மாதம் -
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்!


துன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஒஓ..?
காதல் பிறந்ததே அப்போ..ஒ ஓஒஓ..!
இன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஒஓ..?
கல்யாணம் முடிந்ததே அப்போ..ஒ ஓஒஓ..!


செப்டம்பர் மாதம் - செப்டம்பர் மாதம் -
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்!
அக்டோபர் மாதம் - அக்டோபர் மாதம் -
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்!

துன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஓஒ..?

காதல் பிறந்ததே அப்போ..ஒ ஓஓஒ..!
இன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஓஒ..?
கல்யாணம் முடிந்ததே அப்போ.. ஓஓஓ..!

ஒ ஓஓ ஓஓ ஓஒ.. ஒ ஓஓ ஓஓ ஓஒ..

ஏ... பெண்ணே!
காதல் என்பது இனிக்கும் விருந்து;
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து;
ஏன்... கண்ணே?

ஓ.. நிறையை மட்டுமே காதல் பார்க்கும்;
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும்;
ஏன்... பெண்ணா?
காதல் பார்ப்பது பாதிக் கண்ணில்;
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி, பெண்ணே..

கிளிமூக்கின் நுனிமூக்கில், கோபங்கள் அழகென்று,
ரசிக்கும் ரசிக்கும் காதல்..
கல்யாணம் ஆனாலே, துரும்பெல்லாம் தூணாக;
ஏன், ஏன், ஏன், மோதல்..?

பெண்கள்.. இல்லாமல்,
ஆண்களுக்காறுதல் கிடைக்காது..!
பெண்களே உலகில் இல்லையென்றால்..
ஆறுதலே தேவை இருக்காது!

செப்டம்பர் மாதம், செப்டம்பர் மாதம்,
அஹ ஹ அஹா, அஹ ஹ அஹா, அஹ ஹ அஹஹோ..
அக்டோபர் மாதம், அக்டோபர் மாதம்,
.........உஓ..ஒ,ஓஓஒ..
.........ஒஓ..ஒ,ஓஓஒ..
.........உஓ..ஒ,ஓஓஒ..
.........ஒஓ..ஒ,ஓஓஒ..
..........................ஓஒஓ..ஒஓ ஓஒ..
..........................ஓஒஓ..ஒஓ ஓஒ..


நான்.. கண்டேன்!
காதல் என்பது கழுத்துச் சங்கிலி;
கல்யாணம் என்பது காலில் சங்கிலி;
என்... செய்வேன்?
ஹா!

கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு;
தொண்ணூறு வரைக்கும் டூயட் பாடு;
வா.. அன்பே!
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு;
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே. நண்பா..

பிரிவொன்று நேராத, உறவொன்றில் சுகமில்லை,
காதல் காதல் அதுதான்..
உறவோடு சிலகாலம், பிரிவோடு சிலகாலம்,
நாம் வாழ்வோம், வா! வா!

ஆண்கள்.. இல்லாமல்,
பெண்களுக்காறுதல் கிடைக்காது..!
ஆண்களே உலகில் இல்லையென்றால்..
ஆறுதலே தேவை இருக்காது!


செப்டம்பர் மாதம் - செப்டம்பர் மாதம் -
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்!
அக்டோபர் மாதம் - அக்டோபர் மாதம் -
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்!


துன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஓஒ..?
காதல் பிறந்ததே அப்போ..ஒ ஓஓஒ..!
இன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஓஒ..?

கல்யாணம் முடிந்ததே அப்போ.. ஓஓஓ..!

கண்களில் நீலம் விளைத்தவளோ

பாடல்:
செந்தமிழ் தேன்மொழியாள்

படம்:
மாலையிட்ட மங்கை

இசை:
விஸ்வநாதன் - இராமமூர்த்தி

பாடியவர்:
டி ஆர் மகாலிங்கம்

எழுதியவர்:
கண்ணதாசன்

முழுவரிகள்:
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே..
நில்லென்று கூறி, நிறுத்திவழி போனாளே..!
நின்றதுபோல் நின்றாள்; நெடுந்தூரம் பறந்தாள்!
நிற்குமோ ஆவி; நிலைக்குமோ.. நெஞ்சம்?
மணம் பெறுமோ வாழ்வே..
அஅஆஅஅஆ அஅஆஅஆ அஅஆ ஆஆஅ ஆஅஅஆஅஅ அ..

செந்தமிழ் தேன்மொழியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியா..அ அஅ ஆள்..
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்;
பருகிடத் தலைகுனிவாள்.

காற்றினில் பிறந்தவளோ - புதிதாய்
கற்பனை வடித்தவளோ.. ஓ..
அஅஆஅ ஆஅஅ ஆஅஅ ஆஅஅஆ ஆஆ அஆஆ அஆஆஆ

காற்றினில் பிறந்தவளோ - புதிதாய்
கற்பனை வடித்தவளோ..
சேற்றினில் மலர்ந்தச் செந்தாமரையோ?
செவ்வந்திப் பூச்சரமோ - அவள் (செந்தமிழ்..)

கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள் (செந்தமிழ்..)