செய்வேன், அன்பே - ஓர் அகராதி!

பாடல்:
அக்கம்பக்கம்,, யாருமில்லா,

படம்:
கிரீடம்

இசை:
ஜீ வீ பிரகாஷ் குமார்

பாடியவர்:
சாதனா சர்கம்

எழுதியவர்:
நா முத்துக்குமார்

முழுவரிகள்:
அக்கம்பக்கம்,, யாருமில்லா, பூலோகம் வேண்டும்..
அந்திப்பகல்,, உன்னருகே, நான்வாழ வேண்டும்..

என் ஆசையெலாம், உன் நெருக்கத்திலே;
என் ஆயுள்வரை, உன் அணைப்பினிலே;

வேறென்ன வேண்டும் - உலகத்திலே?
இந்த இன்பம் போதும் - நெஞ்சினிலே!
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்!
(அக்கம்பக்கம்,,)

ஹுஹாஅ,ஹாஅ,ஹ ஹுஹஅ ஹஹ ஹஹ ஹ.. ஒஒஓஒஒ..
ஹுஹாஅ,ஹாஅ,ஹ ஹுஹஅ ஹஹ ஹஹ ஹ..

நீ பேசும்வார்த்தைகள் சேகரித்து,
செய்வேன், அன்பே - ஓர் அகராதி!
நீ தூங்கும்நேரத்தில் தூங்காமல்,
பார்ப்பேன், தினம் - உன் தலைக்கோதி!

காதோரத்தில், எப்போதுமே.. - உன்
மூச்சுக்காற்றின் வெப்பம்சுமப்பேன்!
கையோடுதான், கைக்கோர்த்துநான்.. - உன்
மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன்! (வேறென்ன..)
(அக்கம்பக்கம்,,)

ஸீஹோ,ஸிஹியோ, ஒஓஓஓஹ, ஸைலாஹிலோ, லேஹி - ரீரீயோ..
ஸீஹோ,ஸிஹியோ, ஒஓஓஓஹ, ஸைலாஹிலோ, லேஹி - ரீரீயோ..
ஸேயீலோ.. ஓவுவோ..

நீயும்நானும் சேரும்முன்னே,
நிழல், ரெண்டும், ஒன்று கலக்கிறதே!
நேரம்காலம் தெரியாமல்,
நிஜம், இன்று, விண்ணில் மிதக்கிறதே!

உன்னால்இன்று, பெண்ணாகவே.. - நான்
பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துக்கொண்டேன்!
உன்தீண்டலில், என்தேகத்தில்.. - புது
ஜன்னல்கள் திறப்பதைத் தெரிந்துக்கொண்டேன்! (வேறென்ன..)
(அக்கம் பக்கம்..)

னன னனா, னன னனா,
னானான, னானா..
லல லலா, தர ரரா..
தாலால, லாலா..

ஊமையாய் நானும் மாறினேன்..

பாடல்:
உன்பேரைச் சொன்னாலே,

படம்:
டும் டும் டும்

இசை:
கார்த்திக்ராஜா

பாடியவர்:
உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்

எழுதியவர்:
தெ. தெ, தெ! (தெரியவில்லை. தெரிந்தவர், தெரிவிக்கவும்!)

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

உன்பேரைச் சொன்னாலே,
உள்நாக்கில் தித்திக்குமே..
போகாதே, போகாதே!

உன்னோடு சென்றாலே,
வழியெல்லாம் பூப்பூக்குமே..
வாராயோ, வாராயோ!
(உன்பேரைச்..) (உன்னோடு..)

ஒன்றா, இரண்டா,, ஒரு கோடி ஞாபகம்;
உயிர் தின்னப் பார்க்குதே கண்ணே..
துண்டாய், துண்டாய், பூமியில் விழுந்தேன்;
எங்கே, நீ என் கண்ணே..

சித்தாரா சித்தாரா சித்தா, (4 முறை)

மெய்யெழுத்தும் மறந்தேன்!
உயிரெழுத்தும் மறந்தேன்!
ஊமையாய் நானும் மாறினேன்..

கையைச்சுடும் என்றாலும்,
தீயைத்தொடும் பிள்ளைப்போல்,,
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..

ஒஹோ ஒஹோ, ஒஹோ ஓஹோ ஒஹோ.. (2 முறை)
(கையைச்சுடும்..)
அடிமேல், (அடிமேல்,) அடியா..? (அடியா..?)
மேளம் போல், (மேளம் போல்,) மனதா..?
உயிர் வேறோ ? உடல் வேறோ ?

விதியா..? (விதியா..?) விடையா..? (விடையா..?)
செடி மேல், (செடி மேல்,) இடியா..?
செல்லாதே.. செல்லாதே..!

உன்பேரைச் சொன்னாலே,
உள்நாக்கில் தித்திக்குமே..
நீயெங்கே, நீயெங்கே!

உன்னோடு சென்றாலே,
வழியெல்லாம் பூப்பூக்குமே..
நீயெங்கே, நீயெங்கே!

ஒன்றா, இரண்டா,, ஒரு கோடி ஞாபகம்;
உயிர் தின்னப் பார்க்குதே நண்பா..
துண்டாய், துண்டாய், பூமியில் விழுந்தேன்;
எங்கே, நீ என் நண்பா..

நினைவில்லை என்பாயா?
நிஜமில்லை என்பாயா?
நீ என்ன சொல்வாய், அன்பே..

உயிர்த்தோழன் என்பாயா?
வழிப்போக்கன் என்பாயா?
விடை என்ன சொல்வாய், அன்பே..

ஒஹோ ஒஹோ, ஒஹோ ஓஹோ ஒஹோ.. (2 முறை)
(உயிர்த்தோழன்..)
சாஞ்சாடும், (சாஞ்சாடும்,) சூரியனே.. (சூரியனே..)
சந்திரனை, (சந்திரனை,) அழவைத்தாய்..
சோகம் ஏன், சொல்வாயா?
செந்தாழம் (செந்தாழம்) பூவுக்குள், (பூவுக்குள்,)
புயலொன்று (புயலொன்று) வரவைத்தாய்..
என்னாகும், சொல்வாயா?

(உன்பேரைச்..) (உன்னோடு..)
ஒன்றா, இரண்டா,, ஒரு கோடி ஞாபகம்;
உயிர் தின்னப் பார்க்குதே நண்பா..
துண்டாய், துண்டாய், பூமியில் விழுந்தேன்;
எங்கே, நீ என் நண்பா..

ஆ...,அஆஆஅ அஆஅ அஅஆஆ ஆஆ ஆஆஅ அ..

பேரன்பேத்தி கொள்ளும்வயசுல

பாடல்:
றெக்கைக் கட்டி பறக்குதடி

படம்:
அண்ணாமலை

இசை:
தேவா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா

எழுதியவர்:
தெ. தெ, தெ! (தெரியவில்லை. தெரிந்தவர், தெரிவிக்கவும்!)

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

றெக்கைக் கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்!
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்-கில்! (றெக்கைக் கட்டி..)
தோளைக்கட்டிப் புடிக்கையிலே,
என்ன சுகம் கண்ணம்மா!
இந்த சுகம் எதிலிருக்கு,
இன்னும் கொஞ்சம் போவோமா..?
அடடா.. பழகிக் கெடந்த பழைய நெனப்புல,

றெக்கைக் கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்!
ஆசைப்பட்டு ஏறிக்கிட்டேன் ஐயாவோட பைக்-கில்!

சரித்திரமே மாறிப்போச்சு, மனசு மாறலையே.. - என்
சைக்கிளுக்கும் ஒனக்கும் மட்டும் வயசு ஏறலையே..
கோடிப் பணம் புகழ் இருக்குது, நரைச்ச மாப்பிள்ளையே.. - இன்னும்
கொழுந்து வெத்தலை, மடிச்சுக் கொடுக்க, குறும்பு போகலையே..

ஹான்.. ரெண்டுபேரும் மெத்தையிட்டு அடி எத்தனை நாளாச்சு,
பேரன்பேத்தி கொள்ளும்வயசுல என்னது வீண்பேச்சு..
உயிர் இருக்கும் வரை இருக்கும் - இது காமன்சொன்ன சொல்லாச்சு..

றெக்கைக் கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்! ஹோய், ஹோய்..
ஆசைப்பட்டு ஏறிக்கிட்டேன் ஐயாவோட பைக்-கில்! ஓவர் ரைட்!

ஆடிமனை வீடு தானா சந்தோசம் எனக்கு, - நீ
மூணு மொழம் பூ கொடுத்தா முந்தானை ஒனக்கு..
வாளு போச்சு, கத்தி வந்தது; பழங்கதை இருக்கு, - அடி
வசதி வந்தது, வாழ்க்கைப் போனது, நம்மோட கணக்கு..

இருவர்க்கும் ஒருதலையணை உறக்கம் வராதா..?
இருக்கட்டும் இவனுக்கும் அந்த நெனப்பு வராதா..?
உடல் மறந்து, சுகம் மறந்து, உறவாடும் நேரம் வராதா..

றெக்கைக் கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்!
ஆசைப்பட்டு ஏறிக்கிட்டேன் ஐயாவோட பைக்-கில்!
ஹான்.. தோளைக்கட்டிப் புடிக்கையிலே,
என்ன சுகம் கண்ணம்மா!
இந்த சுகம் எதிலிருக்கு,
இன்னும் கொஞ்சம் போவோமா..?
அடடா.. பழகிக் கெடந்த பழைய நெனப்புல,
றெக்கைக் கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்!
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்-கில்!

எல்லா மொழிக்கும், கண்ணீர் புரியும்!

பாடல்:
எனக்கென ஏற்கனவே,

படம்:
பார்த்தேன்! ரசித்தேன்!

இசை:
பரத்வாஜ்

பாடியவர்:
உன்னி் கிருஷ்ணன், ஹரிணி

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

எனக்கென ஏற்கனவே, பிறந்தவள் இவளோ..?
இதயத்தைக் கயிறு கட்டி, இழுத்தவள் இவளோ..?
ஒளி சிந்தும் இரு கண்கள்;
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்;
என்னுள்ளே, என்னுள்ளே, ஏதேதோ செய்கிறதே...!
அ அஅ ஆஅ அஅஆ..

என்னுள்ளே, என்னுள்ளே, ஏதேதோ செய்கிறதே..
அது என்னென்று அறியேனடி.. ( என்னுள்ளே,.. )
ஓரப் பார்வை பார்க்கும் போதே, உயிரில் பாதி இல்லை..
மீதி பார்வை பார்க்கும் துணிவு, பேதை நெஞ்சில் இல்லை..
எனது உயிரை, குடிக்கும் உரிமை, உனக்கே.. உனக்கே..


உயிரே, உயிரே, உடம்பில் சிறந்தது,
எதுவென்று தவித்திருந்தேன்!
அதை இன்று தான் கண்டு பிடித்தேன்!
கண்ணே உன்னைக் காட்டியதால், என் கண்ணே சிறந்ததடி!
உன் கண்கள் கண்டதும், இன்னொரு கிரகம், கண்முன் பிறந்ததடி!

காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது,
அஅஆஅ ஆஅ,, (காதல் என்ற..)
அது காலத்தைக் கட்டுகின்றது;
என் மனம் என்னும், கோப்பையில் இன்று,
உன்னுயிர் நிறைகின்றது!
(என் மனம்..)


எனக்கென ஏற்கனவே, பிறந்தவள் இவளோ..?
இதயத்தைக் கயிறு கட்டி, இழுத்தவள் இவளோ..?
என்னுள்ளே, என்னுள்ளே, ஏதேதோ செய்கிறதே..
அது என்னென்று அறியேனடி..


மார்புக்குத் திரையிட்டு மறைக்கும் பெண்ணே,
மனசையும் மறைக்காதே!
என் வயதையும் வதைக்காதே!
புல்வெளி கூட, பனித்துளியென்னும் வார்த்தை பேசுமடி!
என் புன்னகைராணி, ஒரு மொழி சொன்னால், காதல் வாழுமடி!

வார்த்தை என்னை கைவிடும் போது, மெளனம் பேசுகிறேன்..
என் கண்ணீர் வீசுகிறேன்..
எல்லா மொழிக்கும், கண்ணீர் புரியும்!
உனக்கேன் புரியவில்லை..? (எல்லா மொழிக்கும்,..)


(எனக்கென..) (ஒளி சிந்தும்..)

(என்னுள்ளே,..) (என்னுள்ளே,..) (ஓரப்பார்வை..)

காற்றில்மிதக்கும் கார்குழல்பின்னி,

பாடல்:
செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,

படம்:
வண்டிச்சோலை சின்னராசு

இசை:
ஏ ஆர் ரஹ்மான்

பாடியவர்:
சாகுல் ஹமீது

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,
சேலை உடுத்தத் தயங்குறியே..

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,
சேலை உடுத்தத் தயங்குறியே..
நெசவு செய்யும் திருநாட்டில்,
நீச்சல் உடையில் அலையிறியே..
கணவன் மட்டும் காணும் அழகை,
கடைகள் போட்டுக் காட்டுறியே.. (செந்தமிழ்நாட்டுத்..)

எலந்தைக காட்டில் பொறந்தவ தானே,
லண்டன் மாடல் நடையெதுக்கு?
காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்ற போது,
காத்துவாங்கும் உடையெதுக்கு?
உடம்புவேர்க்கும் உஷ்ணநாட்டில்,
உரசிப் பேசும் ஸ்டைலெதுக்கு?
டக்கர் குங்குமம் மணக்கும்நாட்டில்,
ஸ்டிக்கர் பொட்டு உனக்கெதுக்கு? (செந்தமிழ்நாட்டுத்..)

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,
சேலை உடுத்தத் தயங்குறியே..
நெசவு செய்யும் திருநாட்டில்,
நீச்சல் உடையில் அலையிறியே..

கற்பு என்பது பிற்போக்கு இல்ல,
கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்!
காற்றில்மிதக்கும் கார்குழல்பின்னி,
கனகபூக்கள் அணிஞ்சிக்கணும்!
பழமை வேறு, பழசு வேறு,
வேறுபாட்டை அறிஞ்சிக்கணும்!
புரட்சியெங்கே, மலர்ச்சி எங்கே,
புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்! (செந்தமிழ்நாட்டுத்..)

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,
சேலை உடுத்தத் தயங்குறியே.. (4 முறை)

வாழாத காதல் ஜோடி, இம்மண்ணில் கோடியே!

பாடல்:
தாஜ்மகால் தேவையில்லை,

படம்:
அமராவதி

இசை:
பாலபாரதி

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

எழுதியவர்:
தெரியவில்லை, தெரிந்தவர் தெரிவிக்கவும்..

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..
இந்த பந்தம், இன்று வந்ததோ?
ஏழுஜென்மம், கண்டுவந்ததோ?
உலகம் முடிந்தும், தொடரும் உறவிதுவோ...

தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..

பூலோகம் என்பது, பொடியாகிப் போகலாம்,,
பொன்னாரமே, நம் காதலோ, பூலோகம் தாண்டி வாழலாம்..!
ஆகாயம் என்பது, இல்லாமல் போகலாம்,,
ஆனாலுமே, நம் நேசமே, ஆகாயம் தாண்டி வாழலாம்..!

கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சுக் காதலே!
கறைமாற்றி நாமும் மெல்ல, கரையேற வேண்டுமே!
நாளை வரும், காலம் நம்மை, கொண்டாடுமே...

தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..

சில்வண்டு என்பது, சிலமாதம் வாழ்வது,,
சில்வண்டுகள், காதல் கொண்டால், செடி என்ன கேள்வி கேட்குமா?
வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே,,
ஆணும் பெண்ணும், காதல் கொண்டால், அது ரொம்ப பாவமென்பதா?

வாழாத காதல் ஜோடி, இம்மண்ணில் கோடியே!
வாழாத பேர்க்கும் சேர்த்து, வாழ்வோமே தோழியே!
வானும் மண்ணும், பாடல் சொல்லும், நம்பேரிலே...

தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..
இந்த பந்தம், இன்று வந்ததோ?
ஏழுஜென்மம், கண்டுவந்ததோ?
உலகம் முடிந்தும், தொடரும் உறவிதுவோ...

தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..

என் உதிரம் கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே!

பாடல்:
குல்மொஹர் மலரே,

படம்:
மஜ்னு

இசை:
ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்:
ஹரிஹரன், டிம்மி, அனுபமா

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
மலரே, மலரே, மலரே, மலரே,
முகவரி என்ன?
உன் மனதில், மனதில், மனதில் உள்ள,
முதல் வரி என்ன?

[பெண் பிண்ணனியில்:
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஓஒஓஒஓ ஓ..ஒஒஒ,
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஒஒஒஒஓ.. (ஒஓஒஓஒ..)]

குல்மொஹர் மலரே, குல்மொஹர் மலரே,
கொல்லப் பார்க்காதே!
உன் துப்பட்டாவில், என்னைக் கட்டித்
தூக்கில் போடாதே!
(பிண்ணனி)ஹே, அயியே... ஓ,ஹோ.. (
குல்மொஹர்..)
தூக்கில் போடாதே!
தூக்கில், போடாதே! தூக்கில்,போடாதே!

மலரின் தொழிலே,
உயிரைக் கொல்லுவதில்லையடி..
மனிதன் உயிரைக் கொன்றால்,
அதன் பெயர் மலரே இல்லையடி..,
அதன் பெயர் மலரே இல்லையடி..
(குல்மொஹர்..)
தூக்கில் போடாதே! தூக்கில், போடாதே!
(மலரே,..)
(மலரே,..)
முதல் வரி என்ன?
முதல் வரி.. முதல் வரி.. முதல் வரி..

உயிரைத் திருகி, உந்தன் கூந்தல் சூடிக் கொள்ளாதே!
என் உதிரம் கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே!
விண்மீன் பறிக்க வழியில்லையென்று கண்களை பறிக்காதே!
என் இரவை எரித்து குழைத்துக் குழைத்து கண்மை பூசாதே!

என்னை விடவும் என்னை அறிந்தும்,
யார் நீ என்று கேட்காதே!
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்,
என்னையும் கவிஞன் ஆக்காதே!
என்னையும் கவிஞன் ஆக்காதே!
(குல்மொஹர்..)
தூக்கில் போடாதே! தூக்கில், போடாதே!
தூக்கி எறியாதே,,, தூக்கில்,போடாதே!

உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி, உடனே ஓடுகிறாய்!
என் ரத்தக் குழாயில் புகுந்துகொண்டு, சத்தம் போடுகிறாய்!
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து, கலகம் மூட்டுகிறாய்!
இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வரும் என, அறிகுறி காட்டுகிறாய்!

மௌனம் என்பது உறவா? பகையா?
வயதுத் தீயில் வாட்டுகிறாய்..
ஏற்கனவே மனம் எரிமலை தானே,
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..?
ஏனடி
பெட்ரோல் ஊற்றுகிறாய்..?
(மலரே,..)
[பெண் பிண்ணனியில்: முகவரியே...]
(மலரே,..)
முதல் வரி என்ன? முதல் வரி என்ன?

மலரே, மலரே, குல்மொஹர் மலரே,
கொல்லப் பார்க்காதே!
உன் துப்பட்டாவில், என்னைக் கட்டித்
தூக்கில் போடாதே!

[பெண் பிண்ணனியில்:
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஓஒஓஒஓ ஓ..ஒஒஒ,
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஒஒஒஒஓ..]
முதல் வரி என்ன? முதல் வரி என்ன?
முதல் வரி என்ன? தூக்கில் போடாதே!

முதல் வரி என்ன? முதல் வரி என்ன?
[பெண் பிண்ணனியில்:
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஓஒஓஒஓ ஓ..ஒஒஒ,
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஒஒஒஒஓ..]
முதல் வரி என்ன?

புதுராகம் படைப்பதாலே, நானும் இறைவனே!

பாடல்:
மடைதிறந்து, தாவும் நதியலை நான்!

படம்:
நிழல்கள்

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வாலி

முழுவரிகள்:
மடைதிறந்து, தாவும் நதியலை நான்!
மனம்திறந்து, கூவும் சிறுகுயில் நான்!
இசைக்கலைஞன், என் ஆசைகள் ஆயிரம்;
நினைத்தது, பலித்தது! ஹோ!

தானன்னன்னன்னா! னான்ன னான னானன்னா!
தானன்னன்னன்னா! னான்ன னான னானன்னா!

ஹேய்! ஹோ.. பாபப்ப பாப்பா!
பாபப்ப பாப்பா பாப்போ பாப்போ! - ப
பாபப்பப்ப, பாபப்பப்பா, பப்பாவ் - பப்பாவ் - ப
பாபப்ப பாப்பா, பாப்பா, பாப்பா!

காலம் கனிந்தது; கதவுகள் திறந்தது!
ஞானம் விளைந்தது; நல்லிசைப் பிறந்தது!
புதுராகம் படைப்பதாலே, நானும் இறைவனே! ஹேய், (புதுராகம்..)
விரலிலும், குரலிலும், ஸ்வரங்களின் நாட்டியம்,
அமைத்தேன்.. நான்! (மடைதிறந்து..)
(பிண்ணனியில் பெண்கள் லாலா..)

லாலே... லாலே...
லாலே லாலே லாலே லாலே..
லாலே லாலே லாலே லாலே லா..!
லாலா லாலி, லாலா லாலி,
லாலா லாலி, லாலா லா.. (லாலா லாலி... 3 முறை)

நேற்றென் அரங்கிலே, நிழல்களின் நாடகம்!
இன்றென் எதிரிலே, நிஜங்களின் தரிசனம்!
வரும் காலம்; வசந்த காலம்; நாளும் மங்களம்.. (வரும் காலம்..)
இசைக்கென, இசைகின்ற, ரசிகர்கள் ராஜ்ஜியம்;
எனக்கே.. தான்! (மடைதிறந்து..)
(பிண்ணனியில் பெண்கள் லாலா..)

புது வெளிச்சம் போடவே இரு நிலவு வேண்டுமா,

பாடல்:
ஒரு புன்னகைப் பூவே..!

படம்:
12B

இசை:
ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்:
கே கே, பிரசாந்தி

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
ஆண்:
ஒரு புன்னகைப் பூவே..!
சிறு பூக்களின் தீவே..!
ஹ்ம் ம்ம் ம்ம் ம் ம்ம்!

குழு:
லல்லால லால லால லாலலாலலா..
லல்லால லால லால லாலலாலலா..
லா,லாலா.. லா,லாலா..

ஆண்:
எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது;
என் பேரை, உன் பேரை,
சொல்லி அழைக்குது;
லவ் பண்ணு.. லவ் பண்ணு..
ஒஓ ஓ ஓ ஓ ஓ, ஓஒ ஒஒஓ ஓஒ ஒஒஓ ஓ..

ஒரு புன்னகைப் பூவே,
சிறு பூக்களின் தீவே,
நீ என்னை மட்டும் காதல் பண்ணு..
என் வாலிப நெஞ்சம்,
உன் காலடிக் கெஞ்சும்,
சிறுக் காதல் பிச்சைப் போடு கண்ணு..
நான் கெஞ்சிக் கேட்கும் நேரம்,
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்,
ஆச்சச்சோ அச்சோ காதல் வாராதோ.. (எங்கேயோ..)

குழு:
தையாரே, தையாரே, தையாரே,,
தைதைதைதை தையாரே,,
தையாரே, தையாரே, தையர தையர தையையை..

ஆண்:
சூரியன் வாசல் வந்து ஐஸ்கிரீம் கொடுக்கும்..
குழு:
உட்டாதமா பீலாதான்மா..
பெண்:
சந்திரன் உள்ளே வந்து சாக்லேட் கொடுக்கும்..
குழு:
சுத்தாதமா ரீலுதான்மா..

ஆண்:
உன்படுக்கையறையிலே ஒரு வசந்தம் வேண்டுமா,
உன்குளியலறையிலே வின்டர் சீஸன் வேண்டுமா,
நீ மாறச்சொன்னதும் நான்கு சீஸனும் மாற வேண்டுமா,
லவ் பண்ணு.. (எங்கேயோ..)

ஐலேஐலேலோ, லேலேலேலேலோ,,
ஐலேஐலேலோ, லெ லேலேலேலேலோ,

ஆண்:
எண்பது ஆண்டுகள் இளமை வேண்டுமா,
குழு:
மெய்யாலுமா, மெய்யாலுமா,
ஆண்:
சொடுக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா,
குழு:
மெய்யாலுமா, மெய்யாலுமா,

பெண்:
அட வெள்ளை வெள்ளையாய் ஓர் இரவு வேண்டுமா,
புது வெளிச்சம் போடவே இரு நிலவு வேண்டுமா,
ஆண்:
உனைக் காலைமாலையும் சுற்றிவருவது காதல்செய்யவே,
லவ் பண்ணு.. ஐயோ பண்ணு,, (எங்கேயோ..)

ஆண்:
ஒரு புன்னகைப் பூவே,,
சிறு பூக்களின் தீவே,,
நீ என்னை மட்டும் காதல் பண்ணு...
என் வாலிப நெஞ்சம்;
உன் காலடிக் கெஞ்சும்;
சிறு காதல் பிச்சைப் போடு கண்ணு..
பெண்:
நீ கெஞ்சிக் கேட்கும் நேரம்,
என் நெஞ்சின் ஓரம் ஈரம்,
அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ..

ஆண்:
(லல்லால..)

மடல்வாழை அழைத்தால், மழைச்சாரல் திரும்பும்..

பாடல்:
மயில்தோகை அழைத்தால்,

படம்:
ரகசிய போலீஸ்

இசை:
லக்ஷ்மிகாந்த் ப்யாரேலால்

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வாலி

முழுவரிகள்:
ஆ..அ,அஆஆ..

அஅஆ, அஅஆ, அஆஆ ஆஅ..

மயில்தோகை அழைத்தால், மழைமேகம் நெருங்கும்..
மடல்வாழை அழைத்தால், மழைச்சாரல் திரும்பும்.. (மயில்தோகை..)

அழைக்காமல் வருவேன்.. அலுக்காமல் தருவேன்;
மனக்கோயில் சிலையே.. உனக்கேது விலையே..
வளைக்காமல் வளைக்கரம் தேட,
வருந்தாமல் துணைக்கரம் கூட,
இடைசேர நமக்கு, இடைவேளை எதற்கு? (மயில்தோகை..)

நதியே மண்மீது நீ, நடந்தால் என் ஆசைப் பூக்கும்;
பறித்தால் செந்தேனைச் சேர்த்து, பனிப்பூ என்மீது வார்க்கும்;
பாவை உடல்,, புல்லாங்குழல்..
மெதுவாய்த் தொடும், உன்மன்னன் விரல்;
தீராது ஆசைப் பாடல்.
தொடங்கும், தொடரும், தலைவன் கூடல். (மயில்தோகை..) (அழைக்காமல்..)

(பிண்ணனியில் பெண்கள்:)
(ஓஹோஹோ ஹோஹொ, ஓஹோஹோ ஹோஹொ,
ஓஹோஹோ ஹோஹொ, ஓஹோஹோ ஹோஹொ,
ஓஹோஹோ ஹொஹோ, ஹொஹொஹோ, ஹொஹொஹோ,,)

கடலில் இல்லாத மீனும்; கணையில் விழாத மானும்;
விழியில் கொண்டாடும் மாது, விடுமோ அன்றாடம் தூது?
காமன் விழா,, காணும் நிலா..
மடிமேல் விழும், என்மஞ்சள்புறா..
மேலாடை சூடி ஆடும்,
மெதுவாய், புதிதாய், கவிதை பாடும். (மயில்தோகை..) (அழைக்காமல்..)

காலச் சுத்தும் நெழலைப் போல,

பாடல்:
ஐயையோ..

படம்:
பருத்திவீரன்

இசை:
யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்:
மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜா

எழுதியவர்:
சினேகன்

முழுவரிகள்:
பெரியவர்:
ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே..

ஒத்தப் பன ஓரத்துல, செத்த நேரம் ஒம்மடியில்,
தல வச்சு சாஞ்சிக்கிறேன்,
சங்கதிய சொல்லித்தரேன், வாடி.. நீ வாடி..!
பத்துக்கண்ணு பாலத்துல, மேச்சலுக்குக் காத்திருப்பேன்,
பாச்சலோட வாடி புள்ள,
கூச்சம் கீச்சம் தேவயில்ல, வாடி.. நீ வாடி..!

ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே..

செவ்வெளநீ சின்னக்கனி,,
உன்ன, செறையெடுக்கப் போறேன் வா நீ..

பெண்:
ஐயையோ..
என் உசுருக்குள்ள தீய வச்சான், ஐயையோ..
என் மனசுக்குள்ள நோயத் தச்சான், ஐயையோ..!

ஆண்:
சண்டாளி உன் பாசத்தாலே,, நானும்,
சுண்டெலியா ஆனேன் புள்ள..!

பெண்:
நீ கொன்னாக்கூட குத்தமில்ல,,
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..!

ஐயையோ..
என் வெக்கம் பத்தி வேகுறதே, ஐயையோ..
என் சமஞ்ச தேகம் சாயிறதே, ஐயையோ..!

ஆண்:
அரளி வெத வாசக்காரி,,
ஆளக் கொல்லும் பாசக்காரி,,
என் ஒடம்பு நெஞ்சக் கீறி,, நீ,
உள்ள வந்த கெட்டிக்காரி..!

ஐயையோ..
என் இடுப்பு வேட்டி எறங்கிப் போச்சே, ஐயையோ..
என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே, ஐயையோ..!

பெண்:
ஹே.... ஹேஹேஹ.. ஹே.... ஹேஹேஹ..

ஹஹா... ஹ...ஹ..அ..

கல்லுக்குள்ள தேரை போல,
கலஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா..?
காலச் சுத்தும் நெழலைப் போல,
பொட்டக்காட்டில் உங்கூடவே தங்கிடவா..?

யுவன்:
ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ..
ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ..

பெண்:
ஐயனாரப் பாத்தாலே ஒன் நெனப்புதான்டா..
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏன்டா?
நான் வாடாமல்லி.. நீ போடா அல்லி..

ஆண்:
தொரட்டிக் கண்ணு கருவாச்சியே,
நீ தொட்டா அருவா கரும்பாகுதே.. ஏ (தொரட்டி..)

சண்டாளி உன் பாசத்தாலே,,
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள,,

பிண்ணனியில் பெரியவர்:
(ஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே)

பெண்:
நீ கொன்னாக்கூட குத்தமில்ல,,
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..!

வானம் உங்கள் கைகளில் உண்டு!

பாடல்:
உன்னால் முடியும், தம்பி! தம்பி!

படம்:
உன்னால் முடியும் தம்பி

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
புலமைப்பித்தன்

முழுவரிகள்:
உன்னால் முடியும், தம்பி! தம்பி!
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!

உன்னால் முடியும், தம்பி! தம்பி! - அட!
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!
தோளை உயர்த்து! தூங்கிவிழும் நாட்டை எழுப்பு! - உன் (தோளை..)
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்! (உன்னால்..)

நாளைய நாட்டின் தலைவனும் நீயே..
நம்பிக்கைக் கொண்டு வருவாயே!
உனக்கெனவோர் சரித்திரமே, எழுதும் காலம் உண்டு!

உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆ ஹா
உன்னால் முடியும், தம்பி! தம்பி! - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்,
சாராய கங்கை காயாதடா!
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்,
காசுள்ள பக்கம் பாயாதடா!

குடிச்சவன் போதையில் நிப்பான்;
குடும்பத்தை வீதியில் வைப்பான்;
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா!

கள்ளுக்கடை காசிலே தாண்டா,
கட்சிக் கொடி ஏறுது போடா, (கள்ளுக்கடை..)
மண்ணோடு போகாமல், நம் நாடு திருந்தச் செய்யோணும், (உன்னால்..)

கல்லூரி, பள்ளி இல்லாத ஊரை,
கையோடு இன்றே தீமூட்டுவோம்!
கல்லாத பேர்கள் இல்லாத நாடு,
நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்!

இருக்கிற கோவிலையெல்லாம்,
படிக்கிற பள்ளிகள் செய்வோம்!
அறிவெனும் கோபுரமங்கே நாம் காணுவோம்!

வானம் உங்கள் கைகளில் உண்டு!
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு! (வானம்..)
நான் என்று எண்ணாமல், நாம் என்று உறவு கொள்ளணும்,

மா கஸமா தமதா நிதநீ மமமம கஸ மமமம தம தததத நித நிநிநிநி
ஸ க ஸ நி ஸ நி த நி த மதம நி ஸ நி தஸநி தநித மஸக(உன்னால்..)

தோளை உயர்த்து! தூங்கிவிழும் நாட்டை எழுப்பு! - உன் (தோளை..)
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்! (உன்னால்..)

அடுத்த அடியென்ன எடுப்பது நான்;

பாடல்:
உன் பார்வையில் ஒராயிரம்,

படம்:
அம்மன் கோவில் கிழக்காலே..

இசை:
இளையராஜா

பாடியவர்:
யேசுதாஸ் [& சித்ரா?]
[இணையத்துல போட்டிருக்காங்க, ஆனா பாடல்-ல பெண்குரல் இல்ல, பெண்குரல் பாடல் எனக்கு கிடைக்கல...]

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
உன் பார்வையில் ஓராயிரம்,
உன் பார்வையில் ஓராயிரம்,
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே! (உன் பார்வையில்..)
நிதமும் உன்னை, நினைக்கிறேன்,
நினைவினாலே, அணைக்கிறேன்,, (உன் பார்வையில்..)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்,
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்;
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்,
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்;
இருக்கும் வரைக்கும், எடுத்துக்கொடுக்கும்,, (இருக்கும்..)
மனதை மயிலிடம் இழந்தேனே;
மயங்கி தினம் தினம் விழுந்தேனே!
மறந்து, இருந்து, பறந்து, தினம் மகிழ,, (உன் பார்வையில்..)

நிதமும் உன்னை, நினைக்கிறேன்,
நினைவினாலே, அணைக்கிறேன்,, (உன் பார்வையில்..)

அணைத்து நனைந்தது தலையணைதான்,
அடுத்த அடியென்ன எடுப்பது நான்;
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்,
இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்;
நினைக்க மறந்தால் தனித்துப் பறந்தேன்,, (நினைக்க..)
மறைத்த முகத்திரை திறப்பாயோ;
திறந்து அகச்சிறை இருப்பாயோ!
இருந்து, விருந்து, இரண்டு, மனம் இணைய,, (உன் பார்வையில்..)

நிதமும் உன்னை, நினைக்கிறேன்,
நினைவினாலே, அணைக்கிறேன்,, (உன் பார்வையில்..)

நிலவினை நம்பி, இரவுகள் இல்லை..

பாடல்:
நலம் வாழ, என்னாளும், என் வாழ்த்துக்கள்

படம்:
மறுபடியும்

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வாலி

முழுவரிகள்:
நலம் வாழ, என்னாளும், என் வாழ்த்துக்கள்..
தமிழ் கூறும், பல்லாண்டு, என் வார்த்தைகள்..
இளவேனில், உன் வாசல் வந்தாடும்..
இளந்தென்றல், உன் மீது பண்பாடும்.. (இளவேனில்..)
(நலம் வாழ..) ஓ..

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்;
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்..
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்;
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்..
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு,
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு,
இதில் என்ன பாவம், எதற்கிந்த சோகம், கிளியே.. (நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது,
மறைவதும் பின்பு உதிப்பதும் மர‌பானது..
கடல்களில் உருவாகும் அலையானது,
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது..
நிலவினை நம்பி, இரவுகள் இல்லை..
விளக்குகள் காட்டும், வெளிச்சத்தின் எல்லை..
ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான், இறைவன்..

நலம் வாழ, என்னாளும், என் வாழ்த்துக்கள்..
தமிழ் கூறும், பல்லாண்டு, என் வார்த்தைகள்..
இளவேனில், உன் வாசல் வந்தாடும்..
இளந்தென்றல், உன் மீது பண்பாடும்.. (இளவேனில்..)
(நலம் வாழ..)

அவன் அருள் மழையினில்..

பாடல்:
முருகனை நினை மனமே....

இசைத்தொகுப்பு:
இளையராஜாவின் கீதாஞ்சலி [பக்திப் பாடல்கள்]

இசை:
இளையராஜா

பாடியவர்:
இளையராஜா

எழுதியவர்:
?? [தெரிந்தவர் தெரிவிக்கவும்-இளையராஜாவாவே இருக்குமோ?]
புதுப்பிப்பு {பிப்ரவரி 9,2008}:
இளையராஜா தான்!
[நடமாடும் திரையகராதி - சொந்தம் ஒருத்தர் கூறியது;
வலையிலும் ராகவன்-னு ஒருத்தர் எழுதியிருக்கார்]

முழுவரிகள்:
முருகனை நினை மனமே..
நலங்கள், பெருகிடும் தினம் தினமே.. (முருகனை..)

உருகிடும் மறுகணமே,
உருகிடும் மறுகணமே,
நெருங்கி வருவது அவன் குணமே.. (முருகனை..)

ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்.. ஆ... (ஒவ்வொரு..)
ஒவ்வொரு செயலிலும் பெருமையை கொடுப்பவன்..
உடலுக்கு உயிர் எனில் உயிருக்கு ஒளி அவன்.. (உடலுக்கு..)
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும், (முருகனை..)

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்.. ஆ.. (அழகனின்..)
அவன் விழியசைவினில் கலைகளும் மலர்ந்திடும்..
அவன் அருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்.. (அவன்..)
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட.. (முருகனை..)

உருகிடும் மறுகணமே,
நெருங்கி வருவது அவன் குணமே.. (முருகனை..)

முழுவரிசை - வணக்கம்

வணக்கம்,

இந்த பதிவு 'வரி'சை பதிவின், துணைப்பதிவாக தொடங்கப் படுகிறது,

'வரி'சை பதிவின் அறிமுகம் காண..

அங்க தினம் வரிகள் போட்டு, அதோட விவரங்களையும் அங்கேயே போடறதவிட, வரிகள் மட்டும் அங்க புதிர் போல போட்டு, முழுவரிகள் & விவரங்கள், விடைபோல இங்க போடலாம்னு தோணுச்சு.. அதாங்க இது..

இப்போ வரி-சை பதிவு இதைச் சார்ந்ததா ஆயிடுச்சு..
ஆனா 'வரி'சை இல்லனா, 'முழுவரிசை' வலையுலகில் பரவியிருக்கும் ஆயிரக்கணக்கான பாடல் வரி பதிவுகளோட பத்தோட பதினொன்னு, அத்தோட இன்னொன்னா, ஆயிடும்.. :-)
அதனால இரண்டையும் பாருங்க..

'வரி'சை
முழு'வரி'சை

நன்றி,
தணிகா