செய்வேன், அன்பே - ஓர் அகராதி!

பாடல்:
அக்கம்பக்கம்,, யாருமில்லா,

படம்:
கிரீடம்

இசை:
ஜீ வீ பிரகாஷ் குமார்

பாடியவர்:
சாதனா சர்கம்

எழுதியவர்:
நா முத்துக்குமார்

முழுவரிகள்:
அக்கம்பக்கம்,, யாருமில்லா, பூலோகம் வேண்டும்..
அந்திப்பகல்,, உன்னருகே, நான்வாழ வேண்டும்..

என் ஆசையெலாம், உன் நெருக்கத்திலே;
என் ஆயுள்வரை, உன் அணைப்பினிலே;

வேறென்ன வேண்டும் - உலகத்திலே?
இந்த இன்பம் போதும் - நெஞ்சினிலே!
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்!
(அக்கம்பக்கம்,,)

ஹுஹாஅ,ஹாஅ,ஹ ஹுஹஅ ஹஹ ஹஹ ஹ.. ஒஒஓஒஒ..
ஹுஹாஅ,ஹாஅ,ஹ ஹுஹஅ ஹஹ ஹஹ ஹ..

நீ பேசும்வார்த்தைகள் சேகரித்து,
செய்வேன், அன்பே - ஓர் அகராதி!
நீ தூங்கும்நேரத்தில் தூங்காமல்,
பார்ப்பேன், தினம் - உன் தலைக்கோதி!

காதோரத்தில், எப்போதுமே.. - உன்
மூச்சுக்காற்றின் வெப்பம்சுமப்பேன்!
கையோடுதான், கைக்கோர்த்துநான்.. - உன்
மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன்! (வேறென்ன..)
(அக்கம்பக்கம்,,)

ஸீஹோ,ஸிஹியோ, ஒஓஓஓஹ, ஸைலாஹிலோ, லேஹி - ரீரீயோ..
ஸீஹோ,ஸிஹியோ, ஒஓஓஓஹ, ஸைலாஹிலோ, லேஹி - ரீரீயோ..
ஸேயீலோ.. ஓவுவோ..

நீயும்நானும் சேரும்முன்னே,
நிழல், ரெண்டும், ஒன்று கலக்கிறதே!
நேரம்காலம் தெரியாமல்,
நிஜம், இன்று, விண்ணில் மிதக்கிறதே!

உன்னால்இன்று, பெண்ணாகவே.. - நான்
பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துக்கொண்டேன்!
உன்தீண்டலில், என்தேகத்தில்.. - புது
ஜன்னல்கள் திறப்பதைத் தெரிந்துக்கொண்டேன்! (வேறென்ன..)
(அக்கம் பக்கம்..)

னன னனா, னன னனா,
னானான, னானா..
லல லலா, தர ரரா..
தாலால, லாலா..

No comments: