மடல்வாழை அழைத்தால், மழைச்சாரல் திரும்பும்..

பாடல்:
மயில்தோகை அழைத்தால்,

படம்:
ரகசிய போலீஸ்

இசை:
லக்ஷ்மிகாந்த் ப்யாரேலால்

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வாலி

முழுவரிகள்:
ஆ..அ,அஆஆ..

அஅஆ, அஅஆ, அஆஆ ஆஅ..

மயில்தோகை அழைத்தால், மழைமேகம் நெருங்கும்..
மடல்வாழை அழைத்தால், மழைச்சாரல் திரும்பும்.. (மயில்தோகை..)

அழைக்காமல் வருவேன்.. அலுக்காமல் தருவேன்;
மனக்கோயில் சிலையே.. உனக்கேது விலையே..
வளைக்காமல் வளைக்கரம் தேட,
வருந்தாமல் துணைக்கரம் கூட,
இடைசேர நமக்கு, இடைவேளை எதற்கு? (மயில்தோகை..)

நதியே மண்மீது நீ, நடந்தால் என் ஆசைப் பூக்கும்;
பறித்தால் செந்தேனைச் சேர்த்து, பனிப்பூ என்மீது வார்க்கும்;
பாவை உடல்,, புல்லாங்குழல்..
மெதுவாய்த் தொடும், உன்மன்னன் விரல்;
தீராது ஆசைப் பாடல்.
தொடங்கும், தொடரும், தலைவன் கூடல். (மயில்தோகை..) (அழைக்காமல்..)

(பிண்ணனியில் பெண்கள்:)
(ஓஹோஹோ ஹோஹொ, ஓஹோஹோ ஹோஹொ,
ஓஹோஹோ ஹோஹொ, ஓஹோஹோ ஹோஹொ,
ஓஹோஹோ ஹொஹோ, ஹொஹொஹோ, ஹொஹொஹோ,,)

கடலில் இல்லாத மீனும்; கணையில் விழாத மானும்;
விழியில் கொண்டாடும் மாது, விடுமோ அன்றாடம் தூது?
காமன் விழா,, காணும் நிலா..
மடிமேல் விழும், என்மஞ்சள்புறா..
மேலாடை சூடி ஆடும்,
மெதுவாய், புதிதாய், கவிதை பாடும். (மயில்தோகை..) (அழைக்காமல்..)

No comments: