பேரன்பேத்தி கொள்ளும்வயசுல

பாடல்:
றெக்கைக் கட்டி பறக்குதடி

படம்:
அண்ணாமலை

இசை:
தேவா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா

எழுதியவர்:
தெ. தெ, தெ! (தெரியவில்லை. தெரிந்தவர், தெரிவிக்கவும்!)

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

றெக்கைக் கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்!
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்-கில்! (றெக்கைக் கட்டி..)
தோளைக்கட்டிப் புடிக்கையிலே,
என்ன சுகம் கண்ணம்மா!
இந்த சுகம் எதிலிருக்கு,
இன்னும் கொஞ்சம் போவோமா..?
அடடா.. பழகிக் கெடந்த பழைய நெனப்புல,

றெக்கைக் கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்!
ஆசைப்பட்டு ஏறிக்கிட்டேன் ஐயாவோட பைக்-கில்!

சரித்திரமே மாறிப்போச்சு, மனசு மாறலையே.. - என்
சைக்கிளுக்கும் ஒனக்கும் மட்டும் வயசு ஏறலையே..
கோடிப் பணம் புகழ் இருக்குது, நரைச்ச மாப்பிள்ளையே.. - இன்னும்
கொழுந்து வெத்தலை, மடிச்சுக் கொடுக்க, குறும்பு போகலையே..

ஹான்.. ரெண்டுபேரும் மெத்தையிட்டு அடி எத்தனை நாளாச்சு,
பேரன்பேத்தி கொள்ளும்வயசுல என்னது வீண்பேச்சு..
உயிர் இருக்கும் வரை இருக்கும் - இது காமன்சொன்ன சொல்லாச்சு..

றெக்கைக் கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்! ஹோய், ஹோய்..
ஆசைப்பட்டு ஏறிக்கிட்டேன் ஐயாவோட பைக்-கில்! ஓவர் ரைட்!

ஆடிமனை வீடு தானா சந்தோசம் எனக்கு, - நீ
மூணு மொழம் பூ கொடுத்தா முந்தானை ஒனக்கு..
வாளு போச்சு, கத்தி வந்தது; பழங்கதை இருக்கு, - அடி
வசதி வந்தது, வாழ்க்கைப் போனது, நம்மோட கணக்கு..

இருவர்க்கும் ஒருதலையணை உறக்கம் வராதா..?
இருக்கட்டும் இவனுக்கும் அந்த நெனப்பு வராதா..?
உடல் மறந்து, சுகம் மறந்து, உறவாடும் நேரம் வராதா..

றெக்கைக் கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்!
ஆசைப்பட்டு ஏறிக்கிட்டேன் ஐயாவோட பைக்-கில்!
ஹான்.. தோளைக்கட்டிப் புடிக்கையிலே,
என்ன சுகம் கண்ணம்மா!
இந்த சுகம் எதிலிருக்கு,
இன்னும் கொஞ்சம் போவோமா..?
அடடா.. பழகிக் கெடந்த பழைய நெனப்புல,
றெக்கைக் கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்!
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்-கில்!

No comments: