ஊமையாய் நானும் மாறினேன்..

பாடல்:
உன்பேரைச் சொன்னாலே,

படம்:
டும் டும் டும்

இசை:
கார்த்திக்ராஜா

பாடியவர்:
உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்

எழுதியவர்:
தெ. தெ, தெ! (தெரியவில்லை. தெரிந்தவர், தெரிவிக்கவும்!)

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

உன்பேரைச் சொன்னாலே,
உள்நாக்கில் தித்திக்குமே..
போகாதே, போகாதே!

உன்னோடு சென்றாலே,
வழியெல்லாம் பூப்பூக்குமே..
வாராயோ, வாராயோ!
(உன்பேரைச்..) (உன்னோடு..)

ஒன்றா, இரண்டா,, ஒரு கோடி ஞாபகம்;
உயிர் தின்னப் பார்க்குதே கண்ணே..
துண்டாய், துண்டாய், பூமியில் விழுந்தேன்;
எங்கே, நீ என் கண்ணே..

சித்தாரா சித்தாரா சித்தா, (4 முறை)

மெய்யெழுத்தும் மறந்தேன்!
உயிரெழுத்தும் மறந்தேன்!
ஊமையாய் நானும் மாறினேன்..

கையைச்சுடும் என்றாலும்,
தீயைத்தொடும் பிள்ளைப்போல்,,
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..

ஒஹோ ஒஹோ, ஒஹோ ஓஹோ ஒஹோ.. (2 முறை)
(கையைச்சுடும்..)
அடிமேல், (அடிமேல்,) அடியா..? (அடியா..?)
மேளம் போல், (மேளம் போல்,) மனதா..?
உயிர் வேறோ ? உடல் வேறோ ?

விதியா..? (விதியா..?) விடையா..? (விடையா..?)
செடி மேல், (செடி மேல்,) இடியா..?
செல்லாதே.. செல்லாதே..!

உன்பேரைச் சொன்னாலே,
உள்நாக்கில் தித்திக்குமே..
நீயெங்கே, நீயெங்கே!

உன்னோடு சென்றாலே,
வழியெல்லாம் பூப்பூக்குமே..
நீயெங்கே, நீயெங்கே!

ஒன்றா, இரண்டா,, ஒரு கோடி ஞாபகம்;
உயிர் தின்னப் பார்க்குதே நண்பா..
துண்டாய், துண்டாய், பூமியில் விழுந்தேன்;
எங்கே, நீ என் நண்பா..

நினைவில்லை என்பாயா?
நிஜமில்லை என்பாயா?
நீ என்ன சொல்வாய், அன்பே..

உயிர்த்தோழன் என்பாயா?
வழிப்போக்கன் என்பாயா?
விடை என்ன சொல்வாய், அன்பே..

ஒஹோ ஒஹோ, ஒஹோ ஓஹோ ஒஹோ.. (2 முறை)
(உயிர்த்தோழன்..)
சாஞ்சாடும், (சாஞ்சாடும்,) சூரியனே.. (சூரியனே..)
சந்திரனை, (சந்திரனை,) அழவைத்தாய்..
சோகம் ஏன், சொல்வாயா?
செந்தாழம் (செந்தாழம்) பூவுக்குள், (பூவுக்குள்,)
புயலொன்று (புயலொன்று) வரவைத்தாய்..
என்னாகும், சொல்வாயா?

(உன்பேரைச்..) (உன்னோடு..)
ஒன்றா, இரண்டா,, ஒரு கோடி ஞாபகம்;
உயிர் தின்னப் பார்க்குதே நண்பா..
துண்டாய், துண்டாய், பூமியில் விழுந்தேன்;
எங்கே, நீ என் நண்பா..

ஆ...,அஆஆஅ அஆஅ அஅஆஆ ஆஆ ஆஆஅ அ..

No comments: