என் உதிரம் கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே!

பாடல்:
குல்மொஹர் மலரே,

படம்:
மஜ்னு

இசை:
ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்:
ஹரிஹரன், டிம்மி, அனுபமா

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
மலரே, மலரே, மலரே, மலரே,
முகவரி என்ன?
உன் மனதில், மனதில், மனதில் உள்ள,
முதல் வரி என்ன?

[பெண் பிண்ணனியில்:
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஓஒஓஒஓ ஓ..ஒஒஒ,
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஒஒஒஒஓ.. (ஒஓஒஓஒ..)]

குல்மொஹர் மலரே, குல்மொஹர் மலரே,
கொல்லப் பார்க்காதே!
உன் துப்பட்டாவில், என்னைக் கட்டித்
தூக்கில் போடாதே!
(பிண்ணனி)ஹே, அயியே... ஓ,ஹோ.. (
குல்மொஹர்..)
தூக்கில் போடாதே!
தூக்கில், போடாதே! தூக்கில்,போடாதே!

மலரின் தொழிலே,
உயிரைக் கொல்லுவதில்லையடி..
மனிதன் உயிரைக் கொன்றால்,
அதன் பெயர் மலரே இல்லையடி..,
அதன் பெயர் மலரே இல்லையடி..
(குல்மொஹர்..)
தூக்கில் போடாதே! தூக்கில், போடாதே!
(மலரே,..)
(மலரே,..)
முதல் வரி என்ன?
முதல் வரி.. முதல் வரி.. முதல் வரி..

உயிரைத் திருகி, உந்தன் கூந்தல் சூடிக் கொள்ளாதே!
என் உதிரம் கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே!
விண்மீன் பறிக்க வழியில்லையென்று கண்களை பறிக்காதே!
என் இரவை எரித்து குழைத்துக் குழைத்து கண்மை பூசாதே!

என்னை விடவும் என்னை அறிந்தும்,
யார் நீ என்று கேட்காதே!
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்,
என்னையும் கவிஞன் ஆக்காதே!
என்னையும் கவிஞன் ஆக்காதே!
(குல்மொஹர்..)
தூக்கில் போடாதே! தூக்கில், போடாதே!
தூக்கி எறியாதே,,, தூக்கில்,போடாதே!

உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி, உடனே ஓடுகிறாய்!
என் ரத்தக் குழாயில் புகுந்துகொண்டு, சத்தம் போடுகிறாய்!
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து, கலகம் மூட்டுகிறாய்!
இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வரும் என, அறிகுறி காட்டுகிறாய்!

மௌனம் என்பது உறவா? பகையா?
வயதுத் தீயில் வாட்டுகிறாய்..
ஏற்கனவே மனம் எரிமலை தானே,
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..?
ஏனடி
பெட்ரோல் ஊற்றுகிறாய்..?
(மலரே,..)
[பெண் பிண்ணனியில்: முகவரியே...]
(மலரே,..)
முதல் வரி என்ன? முதல் வரி என்ன?

மலரே, மலரே, குல்மொஹர் மலரே,
கொல்லப் பார்க்காதே!
உன் துப்பட்டாவில், என்னைக் கட்டித்
தூக்கில் போடாதே!

[பெண் பிண்ணனியில்:
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஓஒஓஒஓ ஓ..ஒஒஒ,
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஒஒஒஒஓ..]
முதல் வரி என்ன? முதல் வரி என்ன?
முதல் வரி என்ன? தூக்கில் போடாதே!

முதல் வரி என்ன? முதல் வரி என்ன?
[பெண் பிண்ணனியில்:
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஓஒஓஒஓ ஓ..ஒஒஒ,
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஒஒஒஒஓ..]
முதல் வரி என்ன?

No comments: