கண்களில் நீலம் விளைத்தவளோ

பாடல்:
செந்தமிழ் தேன்மொழியாள்

படம்:
மாலையிட்ட மங்கை

இசை:
விஸ்வநாதன் - இராமமூர்த்தி

பாடியவர்:
டி ஆர் மகாலிங்கம்

எழுதியவர்:
கண்ணதாசன்

முழுவரிகள்:
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே..
நில்லென்று கூறி, நிறுத்திவழி போனாளே..!
நின்றதுபோல் நின்றாள்; நெடுந்தூரம் பறந்தாள்!
நிற்குமோ ஆவி; நிலைக்குமோ.. நெஞ்சம்?
மணம் பெறுமோ வாழ்வே..
அஅஆஅஅஆ அஅஆஅஆ அஅஆ ஆஆஅ ஆஅஅஆஅஅ அ..

செந்தமிழ் தேன்மொழியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியா..அ அஅ ஆள்..
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்;
பருகிடத் தலைகுனிவாள்.

காற்றினில் பிறந்தவளோ - புதிதாய்
கற்பனை வடித்தவளோ.. ஓ..
அஅஆஅ ஆஅஅ ஆஅஅ ஆஅஅஆ ஆஆ அஆஆ அஆஆஆ

காற்றினில் பிறந்தவளோ - புதிதாய்
கற்பனை வடித்தவளோ..
சேற்றினில் மலர்ந்தச் செந்தாமரையோ?
செவ்வந்திப் பூச்சரமோ - அவள் (செந்தமிழ்..)

கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள் (செந்தமிழ்..)

No comments: