தீர்த்தமழையில், தீக்குளிப்போம்..

பாடல்:
உன் சமையலறையில்,

படம்:
தில்

இசை:
வித்யாசாகர்

பாடியவர்:
உன்னி கிருஷ்ணன், சுஜாதா

எழுதியவர்:
கபிலன்

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

உன் சமையலறையில், நான் உப்பா? சர்க்கரையா?
நீ படிக்கும் அறையில், நான் கண்களா? புத்தகமா? (உன் சமையலறையில்..)

நீ விரல்கள் என்றால், நான் நகமா? மோதிரமா? ஆ..அஅஅ, நீ இதழ்களென்றால், நான் முத்தமா? புன்னகையா? ஆ,ஆ..
நீ அழகு என்றால், நான் கவியா? ஓவியனா? (உன் சமையலறையில்..)

நான் வெட்கமென்றால், நீ சிவப்பா? கன்னங்களா? ஆ..அஅஅ,
நான் தீண்டல் என்றால், நீ விரலா? ஸ்பரிஸங்களா? ஆ,ஆஅ..
நீ குழந்தை என்றால், நான் தொட்டிலா? தாலாட்டா? ஆ,ஆ..
நீ தூக்கமென்றால், நான் மடியா? தலையணையா? ஆ,அஅஆ,
நான் இதயமென்றால், நீ உயிரா? துடிதுடிப்பா? ஆ,ஆ.. (உன் சமையலறையில்..)

நீ விதைகள் என்றால், நான் வேரா? விளைநிலமா? ஆ,அஅஆ,
நீ விருந்து என்றால், நான் பசியா? ருசியா? ஆ,ஆ..
நீ கைதி என்றால், நான் சிறையா? தண்டனையா? ஆ,ஆ..
நீ மொழிகளென்றால், நான் தமிழா? ஓசைகளா? ஆ,அஅஆ,
நீ புதுமையென்றால், நான் பாரதியா? பாரதிதாசனா? நீ

நீ தனிமை என்றால், நான் துணையா? தூரத்திலா?
நீ துணைதானென்றால், நான் பேசவா? யோசிக்கவா?
நீ திரும்பிநின்றால், நான் நிற்கவா? போய்விடவா? ஆ,ஆ..
நீ போகிறாயென்றால், நான் அழைக்கவா? அழுதிடவா? ஆ,ஆ..
நீ காதலென்றால், நான் சரியா? தவறா?

உன் வலதுகையில், பத்துவிரல்.. பத்துவிரல்.
என் இடதுகையில், பத்துவிரல்.. பத்துவிரல்.

தூரத்துமேகம், தூரல்கள் சிந்த,
தீர்த்தமழையில், தீக்குளிப்போம்..

No comments: