நினைவில் உள்ள காட்சி காயுமா?

பாடல்:
பறபற பறபற பற பட்டாம்பூச்சி,

படம்:
கற்றது தமிழ்

இசை:
யுவன்சங்கர்ராஜா

பாடியவர்:
ராகுல்

எழுதியவர்:
நா.முத்துக்குமார்

முழுவரிகள்:
பறபற பறபற பற பட்டாம்பூச்சி,
தொடதொட தொடதொட பலவண்ணம் ஆச்சு;
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி,
இதயத்தின் வானிலை அது மாறிப்போச்சு;

கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு, மனம் ஏங்கிக் கிடக்குதே..
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு, இலை படகு ஆனதே.. (பறபற..)
ஆ ஆ ஆ ஆ ஆஅ.. ஆ ஆ ஆ ஆ ஆஅ..

இன்பம் ஒருபுறம் என்று, துன்பம் மறுபுறம் என்று,
சுற்றிச் சுழலுது இந்த மண்மேலே..
தன்னந்தனியாளென்று, யாருமில்லை என்று,
உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே..

ஏதோ ஏதோ ஓர் உணர்ச்சி,
எரிதணலில் மழையின் குளிர்ச்சி;
கடல் அலைகள் மோதி மோதி,
மனம் சிற்பமாகுதே..
எதிரிலே...
அந்த மழலைக்காலம் மீண்டும் திரும்புதே..
ஒ ஒ ஒஒஓ.. ஒ ஒ ஒஒஓ.. ஒ ஒ ஒஒஒ ஒஒஒஓ.. (பறபற..)

வாழ்க்கை என்பது என்ன, பள்ளிப்பாடமும் அல்ல..
கற்றுக்கொண்டதை மெல்ல முன்னேற..
காதல் என்பது என்ன, புள்ளிக்கோலமும் அல்ல,
காற்றில் கலையும்போது தள்ளாட..
எங்கோ எங்கோ ஓர் உலகம்,
உனக்காகக் காத்துக் கிடக்கும்;
நிகழ்காலம் நதியைப் போல,
மெல்ல நகர்ந்துப் போகுதே..
நதி காயலாம்..
நினைவில் உள்ள காட்சி காயுமா?
ஒ ஒ ஒஒஓ.. ஒ ஒ ஒஒஓ.. ஒ ஒ ஒஒஒ ஒஒஒஓ..

பறபற பறபற பற பட்டாம்பூச்சி
தொடதொட தொடதொட பலவண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி
இதயத்தின் வானிலை அது மாறிப்போச்சு

கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கிக் கிடக்குதே..
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே.. (பறபற..)

No comments: