அனைவரும் இங்கு சரிசமமென, உணர்த்திடும் மழையே,!

பாடல்:
சின்னச் சின்ன, தூரல் என்ன?

படம்:
செந்தமிழ் பாட்டு

இசை:
இளையராஜா, எம் எஸ் விஸ்வநாதன்

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம், அனுராதா ஸ்ரீராம்

எழுதியவர்:
தெ. தெ, தெ! (தெரியவில்லை. தெரிந்தவர், தெரிவிக்கவும்!)
[வாலியா இருக்கலாம்..]

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

சின்னச் சின்ன, தூரல் என்ன?
என்னைக் கொஞ்சும், சாரல் என்ன?
சிந்தச் சிந்த, ஆவல் பின்ன,,
நெஞ்சில் பொங்கும், பாடல் என்ன..(சின்னச் சின்ன, ..)
சின்னச் சின்ன..

உனது தூரலும், இனிய சாரலும், தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா..
அது தீண்டும் 'மேகம்' இல்ல, 'தேகம்' சிலிர்க்குதம்மா!

உனது தூரலும், இனிய சாரலும், தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா..!
நனைந்த பொழுதினில், குளிர்ந்த மனதினில், ஏதோ ஆசை துளிர்க்குதம்மா..!
மனித ஜாதியின், பசியும் தாகமும், உன்னால் என்றும் தீருமம்மா..!

வாரித்தந்த வள்ளல் என்று, பாரில் உன்னை சொல்வதுண்டு!
இனமும் குலமும் இருக்கும் உலகில்,
அனைவரும் இங்கு சரிசமமென, உணர்த்திடும் மழையே,!
சின்னச் சின்ன.. (சின்னச் சின்ன, ..)
சின்னச் சின்ன, தூரல் என்ன?

பிழைக்கு யாவரும், தவிக்கும் நாட்களில், நீயோ இங்கே வருவதில்லை..
படிச்சவன் பாட்டக் கெடுத்தான் கதையா இல்ல இருக்கு,
பிழைக்கு-னு எழுதலயே, மழைக்கு-னு தான எழுதியிருக்கேன்!

ஓஹோ, ஹொஹொ,
மழைக்கு யாவரும், தவிக்கும் நாட்களில், நீயோ இங்கே வருவதில்லை..!
வெடித்த பூமியும், வானம் பார்க்கையில், நீயோ கண்ணில் தெரிவதில்லை..!
உனது சேதியை, பொழியும் தேதியை, முன்னால் இங்கே யாரரிவார்..?

நஞ்சை மண்ணும், புஞ்சை மண்ணும், நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்!
உனது பெருமை உலகம் அறியும்,
இடியெனும் இசை முழங்கிட வரும், மழையெனும் மகளே,!
சின்னச் சின்ன.. (சின்னச் சின்ன, .. 2 முறை)
சின்னச் சின்ன..

No comments: